டாஸ்மாக் தனியார்மயமாகிறதா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
டாஸ்மாக்கை தனியார் மயமாக்கும் ஆலோசனையும் நடைபெற்று வருகிறது என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், "டாஸ்மாக் கடையை மூடிய 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டுள்ளனர். 4,040 கடைகளில் 460 கடைகள் இன்று அடைக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவை மீறி டாஸ்மாக்கை அடைப்பவர்கள் மீது நடவடிக்கை. முறைகேடாக சென்ற பணத்தை சீரமைக்கவே MRP-ல் ரூ.10 சேர்க்கப்பட்டுள்ளது. அரசின் முடிவுக்கு டாஸ்மாக் ஊழியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கடந்த காலத்தில் இருந்த அமைச்சர்போல நான் இருந்திருந்தால் டாஸ்மாக் பிரச்னையே ஏற்பட்டிருக்காது. டாஸ்மாக் தனியார்மயமே ஆகாது என்று கூறவில்லை. சூழ்நிலைகள் உருவானால், நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்தும் பரிசீலிப்போம்.
மதுபாட்டில்களின் ரூ.140 விலையுடன் பாட்டிலை திரும்ப தருவதற்கான ரூ.10 தொகையும் சேர்த்து எம். ஆர்.பியிலேயே ரூ.150 என வந்துவிடும். இனி பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு ரூ.10 பெற்றுக்கொள்ளலாம். திரும்ப வராத பாட்டில்களின் தொகை அரசுக்கு சென்றுவிடும். முன்பு என்ன விலையோ அதே விலைக்குதான் மதுபானங்கள் விற்கப்படுகிறது. விலையேற்றம் ஏதுமில்லை. டாஸ்மாக் ஊழியர்கள் இன்றும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இன்று டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் செய்யக் கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், சட்டம் கட்டாயமாக பாயும் எனவும், 960 பேருக்கு நோட்டீஸ் வழங்கி உள்ளோம். டாஸ்மாக் கடையை மூட சொல்லிய 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்" என்றார்.
டாஸ்மாக் தனியார்மயமாகிறதா? - அமைச்சர் விக்னேஷ் விளக்கம்.!