"ஜனநாயகன் படத்திற்காக நான் எங்க லீவு கேட்டேன்.. எங்க வீடியோ காட்டுங்க பாக்கலாம்?"- அமைச்சர் விக்னேஷ்
பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது, வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது, வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். மதுபானக் கூடங்களில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த ஆலோசனையில் உணவகத்துடன் கூடிய மதுபான கடைகள் செயல்படுத்தலாமா? தனியார் மயமாக்கலாமா? அரசு மதுபான கடைகளில் கட்டமைப்புகளை மாற்றி அமைக்கலாமா? டாஸ்மார்க் கடைகளை முற்றிலும் மூடி விடலாமா என விவாதிக்கப்பட்டது. அதில் உணவகத்துடன் கூடிய மதுபான விட்டார்கள். தனியார் மயமாக்கப்படும் என்ற திட்டமும் கலந்துரையாடலில் உள்ளது.
போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க பலகட்ட முயற்சி நடந்துட்டு வருகிறது. டாஸ்மாக் கடையில் விற்கும் எந்த மதுபானத்தை வாங்குவது என்பதை நுகர்வோர் தான் முடிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில், சம அளவில் மது கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் பார்க்க லீவு கேட்கவில்லை. என்னதான் இருந்தாலும் எங்களுக்குள் உள்ளுணர்வு இருக்கும். அதைத்தான் சொன்னேன். என் தளபதி எங்களுக்கு எப்போதுமே தளபதிதான். முதல்வரை இனி திரையில் பார்க்க முடியாது என்ற வருத்தம் இருந்தாலும், சட்டப்பேரவையில் முதல்வராகப் பார்ப்பதில் மனநிறைவு உள்ளது” என்றார்.