தமிழகத்தில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதியா? - அமைச்சர் விக்னேஷ்
ரெஸ்டோ பார் அமைக்கும் திட்டம் குறித்து டாஸ்மாக் நிர்வாகம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என அமைச்சர் விக்னேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
ஆந்திரா, கர்நாடகாவை போல் தமிழகத்திலும் ரெஸ்டோ பார் உரிமம் வழங்க தமிழக அரசு பரிசீலனை என செய்தி வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் ரெஸ்டோ பாா் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லாவிடில் பாமக போராட்டம் நடத்தும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், “உணவகத்துடன் கூடிய மதுபான கூடமான ரெஸ்டோ பார் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. துறையை சீரமைக்க சில ஆலோசனைகள், விவாதங்கள் மேற்கொள்ளப்படலாம்” என்றார்.