முதலமைச்சர் டேபிளில் இருக்கும் பைல்களை புரட்டி பார்த்தன் விளைவே நேரு வீட்டில் ரெய்டு- அமைச்சர் வெங்கடரமணன்
முதலமைச்சர் விஜய், பிரதமர் வேட்பாளராவது குறித்து 2029ல் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் கருத்து கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெங்கடரமணன், “ஒரே நாளில் எல்லா மாற்றமும் கொண்டுவர முடியாது.. கடன் வாங்காமல் அரசை நடத்தமுடியாது, எதையும் செய்யவும் முடியாது. மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு கடன் வாங்குகிறது. எங்கள் ஆட்சியில் ஒரு ரூபாய் கடன் வாங்கினால் கூட அதனை முழுமையாக மக்கள் திட்டத்திற்கு மட்டும்தான் போகும். இப்போது ஒரு முதலமைச்சராக, மக்கள் பணிகளை விஜய் செய்கிறார். முதலமைச்சர் விஜய், பிரதமர் வேட்பாளராவது குறித்து 2029ல் முடிவெடுக்கப்படும். பிரதமர் வேட்பாளர் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் கூறுவது அவர்களின் தனிப்பட்ட கருத்து. 2029 தேர்தல் வரும்போது, அப்போதைய கால சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முடிவுகள் எடுக்கப்படும்.த.வெ.க. தலைவர், முதல்-அமைச்சர் விஜய் என்ன முடிவெடுக்கிறாரோ, அதன்படி நாங்கள் செயல்படுவோம்.
முதலமைச்சர் டேபிளில் இருக்கும் File-களை கண்டிப்பாக நேரம் வரும் போது எடுப்போம். எதிர்க்கட்சி தலைவர் ”எடுங்க சார், எடுங்க” என்று சொன்னார். நாங்க இன்னும் File-ஐ எடுக்கவே இல்ல. சில File-களை புரட்டி பார்த்து இருப்பார்கள். அதனால் KN நேருவிடம் ரெய்டு நடந்து இருக்கலாம். எங்களுக்கும் அதற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றார்.