முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைச்சர் வன்னியரசுவின் அத்துமீறல்!
நீலகிரி, முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள், அமைச்சர் வன்னியரசு பதிவிட்ட ட்ரெக்கிங் வீடியோவால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்றஅமைச்சர் வன்னியரசு, வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அவர் எடுத்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோக்களில், காட்டுக்குள் புலியை நோக்கி ஓடுவது போன்றும், வனத்துறைக்கு சொந்தமான வாகனத்தின் மீது அமர்ந்திருப்பது போன்றும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் ட்ரெக்கிங் செய்வது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் அமைச்சர் #வன்னியரசு (#vck) தடையை மீறி டிரெக்கிங் சென்று, புலியைப் பின்தொடர்ந்து ரீல்ஸ் (#Reels) வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.#Nilgiri #tiger pic.twitter.com/4njbGkvYNz
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) November 15, 2026
முதுமலை புலிகள் காப்பகம் என்பது புலிகள் காப்பக புலம் (Core Zone). இங்கு சாதாரண சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கூட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் வாகனத்தை விட்டு இறங்க கூடாது, சத்தம் போடக்கூடாது, புலி, யானையை பார்த்தால் 100 மீட்டர் தள்ளி நிற்க வேண்டும், வனத்துறை வாகனம் மீது ஏறுவது கடும் குற்றம், ட்ரெக்கிங் செய்ய முற்றிலும் தடை என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமைச்சருக்கு மட்டும் அனுமதி எப்படி என சர்ச்சை வெடித்துள்ளது.