☰
×

"எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்திருக்கலாம்.."- அமைச்சர் வன்னி அரசு

 

ஆளும் கட்சி MLA எதிர்க்கட்சி MLA அப்படியெல்லாம் கிடையாது.. யார் தவறு செய்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முதல்வர் தான் நம்முடைய முதல்வர்..தவறுக்கு யாரும் துணை போக மாட்டோம் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார். 

தருமபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, "மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்த உடனே எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எம்எல்ஏ என்பதால், எஃப்ஐஆர் போடாமல் கூட தவிர்த்து இருக்கலாம். ஆனால், அவ்வாறு எவ்வித பாகுபாடும் இல்லாமல், முழுமையாக யார் தவறு செய்தாலும், அந்தத் தவறை ஏற்றுக்கொள்ளாமல், அது தவறு என்று சொல்லக்கூடிய அரசுதான், முதல்வர் தான், நம்முடைய முதல்வர். FIR உடனே போடப்பட்டது.. ஆளும் கட்சி என்று FIR போடாமல் தவிர்த்திருக்கலாம் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.. தவறுக்கு யாரும் உடந்தையாக இருக்க மாட்டோம். 

நில அளவை கல்லில் தீபம் ஏற்றினால் இந்து ஆகம விதிகளுக்கு எதிராக இருக்காதா..? சொல்லுங்க..பாஜக மத கலவரத்தை துண்ட நினைக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதல்வர் எடுத்த முடிவு துணிச்சலான முடிவு. கடந்த அரசு எடுக்கத் தவறிய முடிவை, எடுத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் சங்கிகள் திருப்பரங்குன்றம் மலை அருகில் வன்முறை செய்தார்கள். ஆனால், தற்போது அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வராத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். தவெக அரசு ஆளுமையாகச் செயல்பட்டு வருகிறது" என்றார்.