சமூக நீதி விடுதிகளில் மாணவர்களுக்கு ‘மாட்டுக்கறி’- வன்னியரசு
சமூக நீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்குவதை போல மாட்டிறைச்சி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமூக நீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதைப் போல மாட்டிறைச்சி வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு பேட்டியளித்துள்ளார். இதேபோல் கடந்த முறையும் மாணவர் பாரதிதாசன் 'பில்' அனுப்பவில்லை அப்போது எதுவும் பேசவில்லை, இந்த முறை நாங்கள் வந்ததால் அரசியல் படுத்தியிருக்கிறார்கள்.. இருந்தாலும் அவர் படிக்கவேண்டும் என்பதற்காக நாங்கள் பணத்தை அனுப்பியுள்ளோம் என அமைச்சர் வன்னியரசு கூறியுள்ளார்.