×

பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் - அமைச்சர் வன்னி அரசு

 

நீட் ரத்து தான் முதல்வர் விஜய் அரசின் உறுதியான நிலைப்பாடு, ஆனால் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து கொண்டு திமுகவினர் அரசியல் செய்கிறார்கள் என அமைச்சர் வன்னி அரசு கூறியுள்ளார்.


கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தர்மேந்திர பிரதான் பதவி விலகியது மட்டும் போதாது, இந்தியாவின் தலைமை அமைச்சராக இருக்கக்கூடிய பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும். பட்டியல் சமூக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது நீட் தேர்வு. அவர்கள் மருத்துவக் கல்வியை படிக்கக்கூடாது என்றுதான் நீட் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நீட் ரத்து தான் முதல்வர் விஜய் அரசின் உறுதியான நிலைப்பாடு, ஆனால் மாணவர்கள் போராட்டத்தில் புகுந்து கொண்டு திமுகவினர் அரசியல் செய்கிறார்கள்” என்றார்.