இது மாநிலங்களை காப்பதற்கான தேர்தல் - அமைச்சர் உதயநிதி பேச்சு
Jan 29, 2024, 14:03 IST
விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஆலோசனை மேற்கொண்டார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள கழக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை - ஒருங்கிணைப்புக்குழுவின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்றைய தினமும் நடைபெற்றது. விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம்.