மாற்றத்திறனாளிகளின் தன்னம்பிக்கை பயணமும் - லட்சியமும் வெல்லட்டும் - உதயநிதி ஸ்டாலின்
Dec 3, 2023, 14:25 IST
மாற்றத்திறனாளிகளின் தன்னம்பிக்கைப் பயணமும் - லட்சியமும் வெல்லட்டும் என தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், மாற்றுத்திறன் கொண்ட சகோதர - சகோதரிகள் அனைவருக்கும் எனது உலக மாற்று திறனாளிகள் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கிடும் விதமாக, ரூ.1500 என்றிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.2000 என உயர்த்தி வழங்க நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.