கேலோ இந்தியா இளையோர் போட்டி - முன்னேற்பாடுகளை ஆய்வு செய்தார் அமைச்சர் உதயநிதி
Jan 9, 2024, 12:52 IST
சென்னையில் நடைபெறவுள்ள கேலோ இந்தியா இளையோர் போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கேலோ இந்தியா இளையோர் போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ள விளையாட்டு மைதானங்கள் - அரங்குகள் புதுப்பொலிவோடு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வரும் ஏற்பாட்டுப் பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம்.