×

கச்சா எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி 

 

சென்னை எண்ணூரில் கச்சா எண்ணெய் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், மிக்ஜாம் புயல் - வரலாறு காணாத கனமழையைத் தொடர்ந்து, எண்ணூர் முகத்துவாரப் பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கச்சா எண்ணெய்க் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்தோம். முழுக்க முழுக்க எந்திரங்களின் துணையோடு எண்ணெய்க் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி - அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் துணையோடு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முழு பாதிப்பும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் எண்ணெய் கழிவுகள் புகாமல் தடுப்பதற்கு  மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.