×

விளையாட்டு துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது - அமைச்சர் தகவல்

 

தேசிய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் தவிர்க்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருவதாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  இந்திய ஒன்றியத்தில் மட்டுமன்றி உலக அளவிலும் விளையாட்டுத்துறையில் தவிர்க்க முடியாத மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்து வருகிறது.   இதனை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல, நம்முடைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிட்டு, ஆக்கப்பூர்வமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  அப்படி வெளியான அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை பற்றி ஆலோசிப்பதற்கான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம்.