எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன் - அமைச்சர் தங்கம் தென்னரசு
Nov 21, 2023, 12:30 IST
எனது பேச்சு மாற்றுத்திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து வருந்துகிறேன் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது சமூகவலைத்தள பக்கத்தில், கடந்த 18-11-23 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எனது பேச்சின் ஊடே நான் பயன் படுத்திய வார்த்தை மாற்றுத் திறனாளி நண்பர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளதாக அறிந்து மிகவும் வருந்துகிறேன்.