சட்டவிரோத மணல் விற்பனைக்கு முற்றுப்புள்ளி- சீல் வைத்து அமைச்சர் அதிரடி
சென்னையில் சட்டவிரோதமாக மணல் விற்பனை செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வுசெய்து, அந்த இடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டார் அமைச்சர் டி.கே.பிரபு.
சென்னையில் சட்டவிரோதமாக கலப்பட மணல் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கனிம வளத்துறை அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், கலப்பட மணல் விற்பனை செய்தது உறுதிசெய்யப்பட்ட 15 இடங்களை கண்டறிந்த அதிகாரிகள் அவற்றுக்கு சீல் வைத்தனர். சட்டவிரோத மணல் விற்பனையைத் தடுக்க தொடர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக காட்டுப்பள்ளி பகுதியிலிருந்து உரிய அனுமதியின்றி கடற்கரை மணல் எடுத்து வரப்பட்டு, சென்னையில் மலைபோல் குவித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது சோதனையில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.