மீனவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் - அமைச்சர் ஸ்ரீநாத்..!
Aug 20, 2026, 11:12 IST
ஆந்திர அதிகாரிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் கூறியுள்ளார்.
ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி கிருஷ்ணமூர்த்தி சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீநாத், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படும் என்றும், ஆந்திர அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அவர்களின் படகுகளை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.