×

இளம்பெண்ணுக்கு அமைச்சர் சிவசங்கர் கொடுத்த வாக்குறுதி… இணையத்தை கலக்கும் வீடியோ!

தையல் மிஷின் கேட்ட பெண்ணிடம் படிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மேற்படிப்புக்கு தான் உதவி செய்வதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதியளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஸ்டாலின் பதவியேற்ற அதே நாளில், பதவியேற்ற அமைச்சர்களும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம்
 

தையல் மிஷின் கேட்ட பெண்ணிடம் படிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மேற்படிப்புக்கு தான் உதவி செய்வதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உறுதியளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஸ்டாலின் பதவியேற்ற அதே நாளில், பதவியேற்ற அமைச்சர்களும் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில், ஸ்டாலினின் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஒரு இளம்பெண்ணுக்கு கொடுத்த வாக்குறுதி பாராட்டை பெற்றுள்ளது.

அமைச்சர் சிவசங்கரிடம் நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ’12ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். எனக்கு தையல் மிஷின் வாங்கி தாருங்கள் என உதவி கேட்டுள்ளார். சற்றும் தயங்காமல் மிஷின் வாங்கி தருகிறேன் என்று கூறிய அமைச்சர் சிவசங்கர், ‘காலம் முழுவதும் தையல்மிஷினே வாழ்க்கையாகி விடும். தையல் மிஷின் உடன் சேர்த்து மேல் படிப்புக்கும் உதவி செய்கிறேன். நன்றாக படித்து எல்லாருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி அமைச்சர் சிவசங்கருக்கு பாராட்டு மழை பொழிகிறது.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் குன்னம் தொகுதியில் வெற்றிபெற்றசிவசங்கர், அந்தத் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார். அந்த வகையில் செம்பருத்தி எனும் மாணவி தங்கள் கிராமத்திற்கு நூலகம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையை உடனடியாக பரிசீலித்த சிவசங்கர், தனது எம்எல்ஏ நிதியில் நூலகத்தை கட்டி அந்த மாணவியை வைத்தே நூலகத்தை திறக்க வைத்தார் சம்பவம் நினைவுகூரத்தக்கது.