×

"வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கவில்லை" - சிவசங்கர்

 

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக ஓய்வு பெற்ற SSI அதிகாரி சீனிவாசன் என்பவர் அளித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு முன்னாள் அமைச்சர் சிவசங்கர் விசாரணைக்கு ஆஜரானார். இந்த புகார் தொடர்பாக சுமார் 4 மணி நேரமாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர், “போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக நான் பணம் வாங்கவில்லை. விசாரணைக்கு அழைத்ததால் மட்டுமே வந்தேன். பல துறைகளில் மோசடி செய்த இளஞ்செழியனுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. என் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளார். நான் போனில் பேசியதாக கூறுவது பொய். குரல் பரிசோதனைக்கும் நான் தயாராக இருக்கிறேன். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராவேன்” என்றார்.