×

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும்- அமைச்சர் சிவசங்கர்

 

கிளாம்பாக்கம் பேரூந்து நிலையம் செயல்பட்டால் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரத்தில் போக்குவரத்து நெரிசல் குறையும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை அடுத்த தாம்பரம் சாணடோரியம் அறிஞர் அண்ணா பேரூந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி மார்கமாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவண்ணாமலை, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர் புதுச்சேரி கடலூர் சிதம்பரம் நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் ஆகிய ஊர்களுக்கு அரசு பேருந்துகள் விடப்பட்ட நிலையில், இன்று இரவு   போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் பேருந்துகளில் ஏறி பயணிகளிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் செய்தியாள்ரகளிடம் அமைச்சர் சிவசங்கர், “அரசு பேருந்துகள் அரசு அதிவிரைவு பேருந்துகள் என மக்கள் வசதிகாக பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்பட்டது. தீபாவளிக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் இரவு பகலாக பணியாற்று மக்கள் பண்டிகையை மக்களுக்கு பணியாற்றியுள்ளது தமிழக முதல்வர் இரவு பயணங்களை மேற்கொள்ளும்போது ஜாக்கிரதையாக பயணம் செய்திட கேட்டுக்கொண்டுள்ளார். கிளம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலைகளில் நெரிசல் குறையும். தமிழக முதல்வர்கள் வழங்கியுள்ள கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்ட நிலையில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது. 

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கட்டுகுள் வைக்கப்பட்ட நிலையில் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்தவர்கள் சமுக வலைத்தளம் மூலம் வரவேற்று  பதிவுகளை செய்துள்ளனர்.
போக்குவரத்து துறையினர் கடந்த ஆயுதபூஜையின் போது அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை பாய்ந்த நிலையில் அவர்கள் சங்கம் சார்பில் முதலமைச்சரிடம் உறுதி தெரிவிதனர். அதன் பேரில் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கட்டுக்குள் உள்ளது” என்றார்.