×

பேரவையில் MGR பாடல் பாடிய அமைச்சரால் சலசலப்பு..!!
 

 

 

“தம்பி... நான் படித்தேன் காஞ்சியிலே நேற்று... தெரு தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு. ஊரார் தெரிந்துகொள்ள படம் பிடித்தால் சுயநலம் உண்டு. மக்கள் நலம், மக்கள் நலம் என்றே சொல்லுவார்... தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்வார்..." என்ற பாடலைப் பாடிய அமைச்சர் சம்பத்குமார். இதனால் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

இதற்கு, “எம்.ஜி.ஆர். பாடலையே பாடினாரே தவிர, இதைக் குற்றமாக எடுத்துக்கொள்ளக்கூடாது” என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

இதில் குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, “பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கும், அமைச்சர் பாடிய பாடலுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்பினார்.குறிப்பாக, "தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்" என்ற வரிகளை அமைச்சர் பாடியபோது திமுக உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

MGR பாடலை பாடிய அமைச்சர்.. சட்டென எழுந்து பேசிய உதயநிதி.. கலகலப்பான பேரவை..#puthiyathalaimuraitv #TNAssemblyLive #CMVijay #TamilNaduAssemblyLive #TamilNaduAssembly #TNAssembly #AssemblyLive #TNAssemblySession #TamilNaduAssemblySession #CMVijayNews #CMVijaySchemespic.twitter.com/GlBR2A0SwW

— PttvOnlinenews (@PttvNewsX) August 28, 2026