"தவெகவுக்கு ஆதரவு தராமல் இருக்க எங்களை அடைத்து வைத்தார்கள்"- அமைச்சர் ஷாஜகான் பேச்சு
முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதற்காக எங்களை அடைத்து வைத்தார்கள் என அமைச்சர் ஷாஜகான் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ஷாஜகான், “முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க கூடாது என்பதற்காக எங்களை அடைத்து வைத்தார்கள். எங்களை யார் அறையில் அடைத்து வைத்தார்கள் என சொன்னால் நன்றாக இருக்காது. மே 8ம் தேதி இரவு ஐ.யூ.எம்.எல். கட்சியின் 2 சட்டமன்ற உறுப்பினர்களை உணவகத்தில் அடைத்து வைத்து மிரட்டல் விடுத்தவர் யார் என்பதை சொல்ல வேண்டிய நிலை வரும். முதலமைச்சர் விஜய் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று திமுக ஒரு முடிவு சொன்னது, பின்பு மற்றொரு முடிவு சொன்னது. 2 எம்எல்ஏக்களை ஓட்டலில் அடைத்தது யார் என்று உடைத்து பேசினால், அது தமிழக அரசியலுக்கு நல்லதல்ல. அனைத்து மக்களுக்கான ஆட்சியாக சிறுபான்மையினர் மக்களுக்கான ஆட்சியாக மாநில சுயாட்சியை காக்கின்ற ஆட்சியாகதவெக ஆட்சி இருக்கிறது. தவெக ஆட்சியின் செயல்பாடு திமுகவை நிலை குலைய வைத்துவிட்டது.டததிமுக வாங்கிய 31 சதவீத வாக்கு சிறுபான்மை கிறிஸ்தவ முஸ்லீம் சமூதாயத்தின் வாக்குதான். அதற்கு பங்கம் வந்துவிடுமோ என்ற பதற்றத்தில்தான் ஐ.யூ.எம்.எல். மீது சேற்றை வாரி இறைத்துவருகிறார்கள்” என்றார்.