×

#BREAKING அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் ;  5 நாள் காவல் -  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 

 

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செல்லும் என்று  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

 

சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை கைது செய்து தற்போது புழல்  சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் , நீதிபதிகள் போபண்ணா ,  எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை விசாரித்து வந்தது.  இந்த வழக்கில் முழுமையான விசாரணை கடந்த வாரம் முடிவடைந்தது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அமைச்சர் செந்தில் பாலாஜி ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கைது  செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை இல்லை எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு  மனுவை தாக்கல் செய்ய முடியாது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.