×

‘3 மடங்கு மின் கட்டணம் அதிகரிப்பு’ ; நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் உறுதி!

மின் கட்டணம் அதிகமாக இருந்தால் புகாரளித்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள் மின் நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு செலுத்திய மின் கட்டணத்தை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்தது. அதில் பல சிக்கல்களில் இருந்தது. அதற்குப் பிறகு, மக்களே தங்களது வீடுகளில் மின் கணக்கீடு செய்து மின் அலுவலகங்களில் வந்து
 

மின் கட்டணம் அதிகமாக இருந்தால் புகாரளித்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் மின்வாரிய ஊழியர்கள் மின் நுகர்வோரின் வீடுகளுக்கு சென்று மின் கணக்கீடு செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 2019ஆம் ஆண்டு செலுத்திய மின் கட்டணத்தை செலுத்துமாறு மின் வாரியம் அறிவித்தது. அதில் பல சிக்கல்களில் இருந்தது. அதற்குப் பிறகு, மக்களே தங்களது வீடுகளில் மின் கணக்கீடு செய்து மின் அலுவலகங்களில் வந்து கட்டணத்தைச் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது.

அதன் படி, கணக்கீடு செய்து கட்டணத்தை செலுத்தியவர்கள் பலர் மின்கட்டணம் அதிகமாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். ஆனால், ஒரு சிலர் கடந்த 2019ம் ஆண்டு செலுத்திய மின்கட்டணத்தையே செலுத்தினார்கள். அவர்களுக்கு இம்மாதம் அதிக கட்டணம் வந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய 4 மாதங்களுக்கும் சேர்த்து மின்கணக்கீடு செய்யப்படுவதால் மின்கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக மக்கள் புலம்பி தவிக்கிறார்கள்.

ஒரு நபருக்கு ரூ.6 ஆயிரத்துக்கு மேல் மின்கட்டணம் வந்திருப்பதாக புகார் எழுந்தது பற்றி பிரபல தனியார் செய்தி நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இந்த பயனாளரின் மின் இணைப்பு, எண், முகவரி, மண்டலம் பற்றி தெளிவாக குறிப்பிட்டால் தீர்வும் தெளிவும் ஏற்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதிக மின்கட்டணம் குறித்து மின்வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.