×

மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு மீதி கட்டணம் செலுத்தினால் போதும்- செந்தில் பாலா

 

கோவை கொடிசியா தொழில் வளாகத்தில் 280 அரங்குகளுடன்,  10 நாள் நடைபெறும் புத்தக திருவிழா துவங்கியது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள அதிமுக , பாஜகவின் செயல் கண்டிக்கதக்கது. மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள பாஜக மின்கட்டண அதிகம் உள்ள கர்நாடகா, குஜராத் மாநிலங்களில் ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? மக்களுக்காக மின்சார உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என அறிவித்துள்ள அரசியல் கட்சி சமையல் சிலிண்டர் கேஸ் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை ஏன் கண்டிக்கவில்லை என கேள்வி கேட்க வேண்டும், அதிமுக ஆட்சியில் 2012,13,14 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை சுமார் 37 விழுக்காடு மின்சார உயர்வை அதிமுக அரசு அறிவித்தது. 1.59 லட்சம் கோடி மின்துறை கடன் வைத்தது ஏன்? உதய் திட்டத்தில் அதிமுக அரசு ஏன் கையெழுத்திட்டது என்பதற்கு எஸ்.பி.வேலுமணி பதில் சொல்ல வேண்டும். 

இந்த மின்சார உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, சமையல் கேஸ் போல மொத்த பணத்தை பெற்று விட்டு, வங்கி கணக்கில் மானியம் வழங்கப்போவது இல்லை, மின்கட்டணத்திற்கான மானியத்தை கழித்துவிட்டு கட்டணம் செலுத்தினால் போதும்” என தெரிவித்தார்.