×

டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி!

 

தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளது என தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் செயல்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவியுள்ளது. டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டை எந்த ஆவணத்தின் அடிப்படையில் முன் வைக்கிறார்கள். அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்ளும். டெண்டர் முறையில் வெளிப்படை தன்மை கடைபிடிக்கப்படுகிறது, எந்த முறைகேடும் இல்லை. ஆவணங்களை திரட்டியதாக அமலாக்கத்துறையினர் சொல்லி உள்ளனர்.

4 ஆண்டு காலங்களாக டாஸ்மாக் நிறுவனத்தின் பாரத் டெண்டர்கள் முதல் அனைத்து டெண்டர்களுமே ஆன்லைன் முறையில் எடுக்கப்படுகிறது. பொத்தாம் பொதுவாக ஆயிரம் கோடி என சொல்கிறார்கள். ஆயிரம் கோடி என அமலாக்கத் துறைக்கு முன்பே சிலர் பேசினர். 1000 கோடி ஊழல் என்பதை முன்னதாக ஒருவர் சொல்கிறார், பின்னர் அமலாக்கத் துறையும் 1000 கோடி ஊழல் நடைபெற்றதாக கூறுகிறார்கள்
 என கூறினார்.