×

“சின்னம்மா முன்னிலையில் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ணாங்க” – அமைச்சர் செல்லூர் ராஜூ

சசிகலா முன்னிலையில் ஜெயலலிதா எனக்கு அறிவுரை வழங்கினார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. அதேசமயம் சசிகலாவுக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில்
 

சசிகலா முன்னிலையில் ஜெயலலிதா எனக்கு அறிவுரை வழங்கினார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்ற சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. அதேசமயம் சசிகலாவுக்கு சிறையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் சிறைத்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருப்பினும் அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் . அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சசிகலாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடந்த அரசு விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, போயஸ் கார்டன் வீட்டில் அம்மாவும், சின்னம்மாவும் உட்கார்ந்து இருந்தார்கள். அப்போது அம்மா என்னை உட்கார வைத்து, எல்லாருக்கும் ஒவ்வொரு துறை கொடுத்துள்ளேன். உங்களுக்கு கூட்டுறவுத்துறையை அளித்துள்ளேன். இந்த துறையை நீ சிறப்பாக பார்த்துக்கிட்டா நம்ம அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்; அதுவே நீ கவனக்குறைவாக செயல்பட்டால் நம்ம அரசுக்கு அவப்பெயர் தான் கிடைக்கும் என சின்னம்மா முன்பு அறிவுரை அளித்தார் என்று கூறியுள்ளார்.