×

"மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலிக்கும்"- சேகர்பாபு

 

"மே 4 வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற குரல் ஆளுநர் மாளிகையில் ஒலிக்கும்"- சேகர்பாபுபழனி முருகன் கோயிலில்  அமைச்சர் சேகர்பாபு சாமி தரிசனம் செய்தார். மே 4-ஆம் தேதிக்குப் பிறகு ஆளுநர் மாளிகையில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என அமைச்சர் சேகர்பாபு உறுதிபட தெரிவித்தார்.


பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வருகை தந்தார். மலையடிவாரத்தில் உள்ள அழகு நாச்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வருகின்ற மே மாதம் 4-ஆம் தேதிக்குப் பிறகு, சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பை ஏற்பார்" என மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிலவரத்தோடு தற்போது பதிவாகியுள்ள வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இதனால் தேர்தல் முடிவுகளில் எவ்விதப் பாதிப்பும் இருக்காது. திமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்" எனக் கூறினார்.