×


 “கோயில் நிலங்களை மீட்கும் பணியில் வசைபாடுகளை வாழ்த்துகளாக ஏற்று களத்தில் நிற்போம்” - அமைச்சர் சேகர் பாபு

 

குயின்ஸ் லேண்ட் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க வருவாய் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

காசி விசுவநாதர் கோயில் மற்றும் வேணுகோபால சுவாமி கோவில் மற்றும் குளங்கள் கோவிலுக்கு சொந்தமான இடங்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்று ஆய்வு செய்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் மற்றும் வேணுகோபால் சாமி கோயில்கள் பராமரிப்பு இன்றி சிதலமடைந்து காணப்படுகின்றன; விரைவில் கோயிலுக்கு சொந்தமான இரண்டு குளங்கள் சீரமைக்கப்படும். ஜமீன்தார்கள் ஆக வாழ்ந்தவர்கள் இந்த கோவில்களுக்கு பூஜைகள் , முறைகள் செய்ய 177 ஏக்கர் இடத்தை 1884 ஆம் ஆண்டு உயிர் எழுதிவைத்துள்ளனர்.  இதை தற்போது ஆய்வு செய்தோம்.  இந்த இடத்தை மீட்டெடுக்க இந்து சமய அறநிலைத்துறை,  வருவாய்த்துறையினருடன் இணைந்து  மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.

வருவாய் குறைவாக உள்ள கோவில்கள் வருவாய் அதிகம் உள்ள கோவில்களோடு இணைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குயின்ஸ் லேண்ட் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு அவர்கள் தரப்பிலிருந்து விளக்கம் தந்துள்ளனர். நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.  நிலத்தை தமிழக அரசு மீட்கும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறது. கோயில் நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளில் தடைக்கற்களை படிக்கற்களாக்கி,  வசைப்பாடுகளை வாழ்த்துக்களாக்கி  களத்தில் நிற்போம்" என்றார்.