“அது போதைப்பொருள் இல்லங்க... என் குழந்தையோட மாத்திரை பவுடர்” - வைரலான வீடியோவுக்கு பதற்றத்துடன் விளக்கமளித்த அமைச்சர்
2 ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைக்கு மாத்திரை கொடுக்கக்கூடிய செயல்முறையை விளக்குகிறார் அமைச்சர் சரத்குமார். pic.twitter.com/7LQIfBQi6b
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) June 26, 2026
போதைப்பொருள் பயன்படுத்துவது போன்று 2 ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் சரத்குமார், “Drug free socity ஆக தமிழ்நாட்டை மாற்ற வேண்டுமென இன்று காலையில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு வந்தேன். போயிட்டு வந்ததற்கு அப்புறம், ஒரு தப்பான வதந்தியை கிளப்பி கொண்டிருக்கிறாங்க. அது என்னவெனில் 2 ஆண்டுகளுக்கு முன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஐபிஎல் மேட்ச் பார்க்க போயிருந்தோம். குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் என் மனைவி மாத்திரையை பொடியாக்கி கொடுக்க சொன்னார். அதற்காக என் குழந்தைக்கு தண்ணியில கலந்து கொடுக்குறதுக்காக மாத்திரைய உடைச்ச வீடியோ தான் அது... அவ்ளோ போலீஸ், அவ்வளவு கூட்டம் இருக்குற ஐ.பி.எல் நடக்குற இடத்துல அப்படி யாராவது பண்ண முடியுமா? அது போதைப்பொருள் என தப்பான வதந்திய பரப்பிக்கிட்டு இருக்காங்க.. ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு.. இதுமாதிரிலாம் இனி செய்யாதீங்க! இதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டியது எங்க கடமை” என்றார்.அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைக்கு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது