"Thug Life Moment" ஸ்டேட்டஸ் போட்டு மாட்டிக்கொண்ட அமைச்சர் சரத்குமார்
2 ஆண்டுகளுக்கு முன் அமைச்சர் சரத்குமார் கிரிக்கெட் மைதானத்தில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் அமைச்சர் சரத்குமார் வெள்ளையாக ஒரு பொடியை தனது செல்போன் திரையில் வைத்து நுணுக்கி தனது க்ரெடிட் கார்ட் கொண்டு அதனை மெல்லிய கோடு போல அமைக்கிறார். தனது இன்னொரு கையில் ஒரு 500 ரூபாய் தாளையும் வைத்திருக்கிறார். இது உயர் ரக போதை வஸ்து என்று சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. அந்த வீடியோ போலியானது அல்ல, நாங்கள் எடுத்த வீடியோ தான் என்பதை முதலில் சரத்குமாரின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார். அவரது மனைவி அது குழந்தைக்குக் கொடுக்க மாத்திரையை நுணுக்கிய வீடியோ என்கிறார்.
குழந்தைக்கு மாத்திரை கொடுக்கக்கூடிய செயல்முறையை விளக்குகிறார் அமைச்சர் சரத்குமார். pic.twitter.com/7LQIfBQi6b
— இடும்பாவனம் கார்த்திக் (@idumbaikarthi) June 26, 2026
ஒன்றரை வயதுக் குழந்தையை இவ்வளவு இரைச்சல் மிகுந்த ஒரு கிரிக்கெட் போட்டிக்கு அழைத்துச் செல்வார்களா? அதுவும் உடம்புக்கு முடியாத குழந்தையை! அப்படியே சென்றாலும் செல்பி புகைப்படத்திலே குழந்தையைக் காணவில்லையே. அந்த வீடியோவிலோ அதற்கு முந்தைய ஸ்டேட்சிலோ குழந்தையைக் காணவில்லை. மொத்தம் 4 பேர் அதில் உள்ளனர். குழந்தை இல்லை. அதே போல இந்த ஸ்டேடஸில் "Thug Life Moment" என்று போட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.