×

பூட்டு போட்ட பெட்டி ; ஸ்டாலினுக்கு அறிவாலயத்தில் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லையா ?

கொரோனா காலத்தில் எனது உயிரை விட மக்கள் நலனே முக்கியம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைகளை தீர்த்தவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், ” முன்பு இல்லாதது போல அரசியல் வரலாற்றிலேயே இந்த முறைதான் ராமநாதபுரத்திற்கு 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது .
 

கொரோனா காலத்தில் எனது உயிரை விட மக்கள் நலனே முக்கியம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைகளை தீர்த்தவர் எடப்பாடி பழனிசாமி என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் முதுகுளத்தூரில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பின் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது பேசிய அவர், ” முன்பு இல்லாதது போல அரசியல் வரலாற்றிலேயே இந்த முறைதான் ராமநாதபுரத்திற்கு 30 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது . கடை கோடி மக்களும் நலத்திட்ட உதவிகளை பெற வேண்டுமென்ற மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றி உள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளார் . முதல்வர் பழனிசாமி விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளார் அதிமுக அரசு மின்னல் வேகத்தில் செயல்படும் அரசாக உள்ளது. அதற்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். அது எடப்பாடியால் மட்டும்தான் முடியும் ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “நீர் மேலாண்மையில் முதன்மை மாநிலம் என சிறந்து விளங்குவது தமிழ்நாடு தான். இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் எனது உயிரை விட மக்கள் நலனே முக்கியம் என சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைகளை தீர்த்தவர் எடப்பாடிபழனிசாமி . எதிர்க்கட்சித் தலைவர் கோட்டையில் உட்கார்ந்துகொண்டு அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் குறைதீர்க்கும் முகாம் என்ற போர்வையில் பெட்டிக்குள் பெட்டி வைத்து பூட்டு போட்டு அதை அறிவாலயத்தில் கொண்டுபோய் வைப்பார்களாம்… அப்படி என்றால் அறிவாலயத்தில் இருக்கக்கூடியவர்கள் மீது நம்பிக்கை இல்லையா ?எதற்காகப் போடுகிறார்கள்? என்று கேள்வி எழுப்பினார்.