×

டாய்லெட் கூட இல்ல... அங்க மல்டி லெவல் கார் பார்க்கிங் எதற்கு? கோயில் நிதியை கமர்சியலாக பயன்படுத்தியது ஏன்? - அமைச்சர் ரமேஷ் அதிரடி

 

கோவில் நிதியை பயன்படுத்தி மல்டி லெவல் கார்  பார்க்கிங் எதற்காக அமைக்கப்பட்டது? என முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கேள்வி எழுப்பினார்.

சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரமேஷ், “குன்னூர் அருள்மிகு விநாயகர் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான கழிவறை போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் சரியாக இல்லை.  ஆனால் தினசரி 500 பேர் வரும் கோவில்களுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைத்துள்ளனர். அடிப்படை வசதி இல்லாத கோவிலில், கோவில் நிதியை பயன்படுத்தி மல்டிலெவல் கார் பார்க்கிங் எதற்காக அமைக்கப்பட்டது? கோவில்களுக்கான நிதி கோவில்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும், கடந்த ஆட்சி காலத்தில் கோவில்களை கமெர்ஷியலாக மாற்ற முயற்சித்தார்கள். கடந்த ஆட்சியில் கோயில்களில் வணிக நோக்கத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவில் நிதியை வர்த்தக காரணங்களுக்காக பயன்படுத்தியதால் பல்வேறு திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவிலில் பக்தர்களுக்கான வசதியை திமுக அரசு மேம்படுத்தவில்லை.” என்றார்.