×

“என்ன சொன்னாலும் அழுகுறீங்க.. திமுக பாப்பா MODEL”- அமைச்சர் ரமேஷ்

 

பதவிகளை துறந்து அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த அனைவருக்கும் நெஞ்சாா்ந்த நன்றிகள் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. இணைப்பு விழாவில் உரையாற்றிய அமைச்சர் ரமேஷ், “ஏற்கனவே கரூரும் புதுக்கோட்டையும் தளபதி கோட்டையாகத்தான் இருந்தது. அந்தக் கோட்டைக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக 2 தளபதிகள் நம்மோடு இணைந்திருக்கிறார்கள். தமிழ்நாடே இனிமேல் தளபதி கோட்டைதான். பதவிகளை துறந்து அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்த அனைவருக்கும் நெஞ்சாா்ந்த நன்றிகள். நம்முடைய முதலமைச்சர் விஜயின் தலைமையை ஏற்று மாற்றுக் கட்சியினர் ஒவ்வொரு வாரமும் சாரை சாரையாய் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நல்ல தலைவராக எம்.ஜி.ஆருக்கு பிறகு நம்முடைய தலைவர் முதலமைச்சர் விஜய்தான் இருக்கிறார். தலைவர் என்பவர் தொண்டர்களின் தோள் மேல் ஏறி நிற்க கூடாது. தொண்டர்களை தன் தோளில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும். எனவேதான் நமது இயக்கத்தில் மாற்றுக் கட்சியினர் வந்து இணைகின்றனர்.

நம்மல சோபா மாடல்னு சொல்றாங்க... தவெக சோபா மாடல் என்றால் திமுக பாப்பா மாடல். தொட்டதற்கெல்லாம் திமுக அழுது கொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான கேள்விகளை கேட்பார்கள் என்று எதிர்பார்த்தால் முழு வன்மத்தையும் கொட்டுகின்றனர். இப்போது இருக்கும் எதிர்கட்சிக்கு என்ன பண்றதுனே தெரியல.. வன்மத்தை கக்குவதையே வேலையா வைச்சி இருக்காங்க.