☰
×

"தெருக்கூத்தாடிகள் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது" - அமைச்சர் ரமேஷ்

 

பாடகர்களை தெருக்கூத்தாடிகள் என விமர்சித்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அமைச்சர் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், "தமிழக முதலமைச்சரும் சரி, நாங்களும் சரி இதுபோன்று புகழ் பாடுவதை விரும்பவில்லை. சூரசம்கார விழா பாடல் சர்ச்சையில் பாடகர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவோம்.  முதலில், பாடகர்கள், கலைஞர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தெரிந்திருக்க வேண்டும். திமுக-வின் மனநிலை பண்ணையார் மனநிலை. பாடகர்களை தெருக்கூத்தாடிகள் என்று பேசுவது எந்த வகையில் நியாயம்?. அவர்களை தெருக்கூத்தாடிகள் எனக் கூறுவது கண்டிக்கத்தக்கது. பாடகர்களை இழிவுபடுத்தும் வகையில் திமுக பேசுவது ஏற்புடையதல்ல.  வேண்டுமென்றே இந்த விஷயத்தை பெரிதாக்குகின்றனர். வருங்காலத்தில் இதுபோல் நடந்தால் நடவடிக்கை எடுப்போம். 

எந்த விதிகளின்படி கோயில் நிலத்தை திருட தி.மு.க அனுமதித்தது? தி.மு.க.வினர் கோயில் நிலங்களை திருடியதை ஒவ்வொன்றாக வெளிக்கொண்டு வருகிறோம்" என்றார்.