"கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்"- அமைச்சர் ரமேஷ்
கோயில்களுக்கு அடிப்படையாக என்ன தேவையோ அதை மட்டுமே செய்து வருகிறோம் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
திருச்சி ஶ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், "கோயில்களில் எந்தப் பணிகளுக்கும் யாரிடமும் பணம் கொடுக்க வேண்டாம். யார், எதற்காகப் பணம் கேட்டார்கள் என்று குறிப்பிட்டுச் சொன்னால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்! பொத்தாம்பொதுவாகக் குற்றம்சாட்டாமல், புகார்களை ஆதாரத்துடன் கூறினால் நடவடிக்கை எடுக்கத் தயார். கடந்த ஆட்சியைப் போல தேவையில்லாத இடங்களில், தேவையில்லாத திட்டங்களை நாங்கள் கொண்டு வர விரும்பவில்லை. கோவில்களுக்கு அடிப்படையாக என்ன தேவையோ அதை செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம். திமுக ஆட்சியில் நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களும், பாதியில் நிறுத்தப்பட்ட திட்டங்களும் ஏராளம். அவற்றை நிறைவேற்றவும் நிதி ஒதுக்க வேண்டியுள்ளது என்பதைத்தான் குறிப்பிட்டேன்!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு எப்படி கோப்புகளை பாதுகாத்தாரோ அதைவிட தற்போது அதிக பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். முதல்வர் விஜய் குறித்துப் பேசிய நயினார் நாகேந்திரனின் பேச்சை ஆய்வுசெய்து வருக்கிறோம். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.