விஜய் ‘எம்மதமும் நம் மதம்' என்று நினைக்கக் கூடியவர்- ரமேஷ்
"கட்டணமில்லா தரிசனத்திற்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ரமேஷ்
கோவிலில் கட்டணமில்லா தரிசனத்திற்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.
திருச்சியில் பேட்டியளித்த அமைச்சர் ரமேஷ், “சென்னை முழுவதும் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி மிக துரிதமாக பணிகள் நடைபெறுகிறது. அனைத்து இடங்களிலும் மழைநீர் அகற்றப்பட்டிருக்கு. நானும் சென்னைக்கு தான் போறேன்.. உடனடியாக அனைத்து பணிகளும் நடக்கிறது. திருவண்ணாமலை கோவிலில் மாற்று மதத்தை சேர்ந்தவர் உரிய அனுமதி பெற்று தான் கோவிலுக்குள் வந்தார். வேண்டுமென்றே சிலர் மத அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தில் மதத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். முதலமைச்சர் விஜய் அவர்கள் ‘எம்மதமும் சம்மதம்' என்பது மட்டும் இல்லாமல் ‘எம்மதமும் நம் மதம்' என்று நினைக்கக் கூடியவர். மசூதி, சர்ச், கோவில் என அனைத்து இடங்களுக்கும் செல்வார். அமைச்சர்களும் அதே போல தான். தமிழ்நாட்டு மண் மதச்சார்பற்ற சமூக நீதிக்கான மண். கோவிலில் கட்டணமில்லா தரிசனத்திற்கு பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களை என் கவனத்திற்கு கொண்டு வாருங்கள் நடவடிக்கை எடுப்பேன்” என்றார்.