"பையனை சரியாக வளர்க்கவில்லை" - ஸ்டாலினை விளாசிய ரமேஷ்
தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும், மின்தடை பிரச்சினை சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதாகவும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சிலர் வேண்டுமென்றே போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “கோயில்களில் பொது வழியில் மக்களோடு மக்களாக செல்வது அவமரியாதையா? இது என்ன புதுக் கலாசாரம்? முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு தரிசனம் செய்து வைக்கத்தான் அதிகாரிகள் உள்ளார்களா? அவர்கள் மக்கள் பணியாற்றத்தான் உள்ளார்கள். நானும் பல கோயில்களுக்கு செல்கிறேன். நான் எந்த விஐபி வரிசையிலும் செல்வதில்லை. மக்களோடு மக்களாகத்தான் தரிசனம் செய்கிறேன். அப்படியென்றால், பொதுமக்களை அவர் அவமரியாதையாக நினைக்கிறாரா? கீழ்த்தரமாக பேசுவது தான் திமுகவின் DNA.. தான் பெற்ற மகனையே முறையாக வளர்க்காத ஸ்டாலின், கட்சியை ஒழுங்காக வைத்திருப்பார் என எதிர்பார்க்க முடியாது; திமுகவினர் ஆபாசமாகப் பேசவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்றும், மின்தடை பிரச்சினை சரி செய்யப்பட்டு தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. சிலர் வேண்டுமென்றே போராட்டம் நடத்துகின்றனர்.
முதலமைச்சர் விஜய் மிகத் தெளிவாக ஆட்சி நிர்வாகம் நடத்தி வருகிறார். உலகளவில் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். மற்றவர்கள் விமர்சனத்துக்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அதனால்தான் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைமையில் அதிமுகவினர் உள்ளனர். இபிஎஸ் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசக் கூடாது. இப்படி பேசுவதால் தான் எதிர்க்கட்சி வரிசை கூட இபிஎஸ்-க்கு கிடைக்கவில்லை” என்றார்.