கோயிலுக்கு கேமரா இல்லாத போனை எடுத்து செல்லலாம்- அமைச்சர் ரமேஷ்
பக்தர்கள் அமைதியான சூழலில் தரிசனம் செய்வதற்காக 52 முதுநிலை கோயில்களில் செல்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழனி, திருச்செந்தூர், மதுரை, ராமேஸ்வரம் கோயில்களில் ஏற்கெனவே தடை நடைமுறையில் உள்ளது. இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்போன்களை வாகனங்களிலோ, அல்லது தங்கியுள்ள அறைகளிலோ வைத்துவிட்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும்
புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது. புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண செல்போன்களை பக்தர்கள் கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம் என அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.