×

கோவில்களில் செல்போன் எடுத்துசெல்ல தடை ஏன்?- அமைச்சர் ரமேஷ் விளக்கம்

 

கோவிலில் உள்ளே ரீல்ஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளை  தடை செய்யவே கோவிலில் உள்ள செல்போனுக்கு அனுமதி இல்லை என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் அமைதிக்காகவும், கோயில்களில் உள்ள சிற்பங்களைக் கண்டு ரசிப்பதற்காகவும் வருகை தருகிறார்கள். ஆனால், சிலர் அவர்களது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் விதமாக செல்போன்களை எடுத்துவந்து படம் எடுப்பதும், ரீல்ஸ் செய்வதும் அதிகரித்து வருகிறது. இதனால், ஆன்மிக நம்பிக்கையுடன் கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பாதிக்கப்படுவதால், தற்போது தமிழகத்தில் உள்ள முதன்மையான கோயில்களில் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செல்போன்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தைத் தடுக்கும் விதமாகப் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, ஆன்லைன் மூலம் பதிவு செய்து சாமி தரிசனம் செய்யக்கூடிய வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணி முழுமையடைந்தால், தரிசனத்திற்கு வரக்கூடிய முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரிசனம் செய்யக்கூடிய நிலை ஏற்படும். அப்போது தான் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள்” என்றார்.