×

தி.மு.க. ஆட்சியில் தூங்கிக் கொண்டிருந்தார்களா? - அமைச்சர் ரமேஷ்

 

முதுநிலை கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் செல்போன் பாதுகாப்பிடங்கள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார்.

ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், “செப். 1 முதல் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. கோயிலுக்குள் செல்போன் தேவையற்ற ஒன்று. முதுநிலை கோயில்களில் செப்டம்பர் ஒன்றாம் தேதிக்குள் செல்போன் பாதுகாப்பிடங்கள் அமைக்கப்படும். அங்கு செல்போன்களை கொடுத்து டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். விஐபிக்கள் தரிசனத்தை வீடியோ பதிவு செய்யக்கூடாது. திரை பிரபலங்கள், அரசியல்வாதிகளிடம் கோயிலுக்கு வெளியில் பேட்டி எடுங்கள். கோயிலுக்குள் செல்வதையெல்லாம் மீடியா நண்பர்கள் வீடியோ எடுப்பதை தவிர்த்துக் கொள்ளலாம். கோவில்களுக்குள் ரீல்ஸ் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  மன அமைதிக்காக கடவுளை வணங்க கோவிலுக்கு வருவோர் செல்போன்களை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறக்கட்டளை நிலம் பத்திரப்பதிவு முறைகேடு குறித்து திமுக ஆட்சிக் காலத்திலேயே புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? நடவடிக்கை எடுக்காமல் தூங்கிக் கொண்டிருந்தார்களா?  கடந்த 5 ஆண்டுகளாக கோயில் சொத்துகளை அபகரித்தவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என் கவனத்திற்கு வந்த பிறகு, காவல்துறை வழக்குப் பதிவு செய்து, தற்போது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில முறைகேடு விவகாரத்தில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பழனி கோவில் நில விவகாரத்திலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.