பார்த்தசாரதி கோவிலில் அமைச்சர் ரமேஷ் அதிரடி ஆய்வு! பிரசாதம் பற்றி சொன்ன செம தகவல்!
பார்த்தசாரதி திருக்கோவிலில் அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்தார்.
அவர் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட கோவில்களில் பிரசாதங்கள் அங்கேயே தயாரிக்கப்படுகிறது. கோவில்களில் பிரசாதங்கள் தரமான முறையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சாத்தியக்கூறு இருக்கும் கோவில்களில் மட்டும் செய்து கொண்டு இருக்கிறோம்.
மழையை பொறுத்த வரைக்கும், எந்தெந்த கோவில்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது என்று தமிழகம் முழுவதும், ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மூலம் சர்வே எடுத்து கொண்டு இருக்கிறோம்.
அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் வந்தால், எப்படி வெளியேற்ற வேண்டும் என்று எல்லா அறிவுறுத்தல்களையும் கொடுத்து இருக்கிறோம். முன்பே விட ஆக்டிவாக மீடியாக்களில் வரக்கூடிய, மக்கள் சொல்லக்கூடிய புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்.
விமர்சனத்துக்காக நாங்கள் யாரையும் கைது செய்வது கிடையாது; ஆபாசமாகவும், அவதூறாகவும், மரியாதை இல்லாமலும், முதல்வரை பார்த்து தரக்குறைவாகவும் பேசுபவர்கள் மீது தான் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விமர்சனத்துக்கு தமிழக வெற்றிக்கழகம் அஞ்சாது. பதில் சொல்ல நாங்கள் எல்லோரும் தயாராக இருக்கிறோம். முதல்வர் விஜய்யும் எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி கொண்டு இருக்கிறார். புதிய கட்சி ஆட்சிக்கு வந்து சட்டசபையில் 50 ஆண்டு கால கட்சியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறோம்.
விமர்சனத்துக்கு பதில் சொல்வதில் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. ஆபாசமாக, அவதூறாக பேசினால் அதற்கான ஆகஷன் கண்டிப்பாக எடுப்போம். நீங்கள் என் ஆபாசமாக பேசுகிறீர்கள்; அவதூறாக பேசுகிறீர்கள், விமர்சனம் வையுங்கள்; அரசியல் ரீதியாக கருத்துக்களை முன்வையுங்கள் என்று அவர்களை பார்க்கும் மீடியாக்கள் கேட்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்