CM விஜய்க்கு சென்ற மீனாட்சி பிரசாதம்!
செப்டம்பர் 17-ம் தேதி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக நடைபெற்றது. இதையடுத்து, மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதத்தை அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் இன்று முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வழங்கினார்.
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது.
— TVK Ramesh (@RameshOffcl) September 21, 2026
இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்… pic.twitter.com/0KFj3khfXr
இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், “உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 17ஆம் தேதி வெகு விமரிசையாகவும், அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையிலும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு நேரில் வழங்கப்பட்டது. அப்போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதற்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.