×

“அந்த மனசு தான் சார் கடவுள்”- அமைச்சர் ராஜ்மோகன் செய்த நெகிழ்ச்சி செயல்

 

நடிகர் பாவா லட்சுமணனுக்கு தனது குடியிருப்பை வழங்கினார் அமைச்சர் ராஜ்மோகன்.

நடிகர் பாவா லட்சுமணன் குடியிருக்க வீடு இல்லாமல் தவித்தார். இதனை அறிந்த உடன் அமைச்சர் ராஜ்மோகன் இன்று (2.6.2026) அவரை சந்தித்து எனது எம்.எல்.ஏ குடியிருப்பில் வந்து குடியிருங்கள் உங்களுக்கு வேண்டியதை நான் செய்து தருகிறேன்  என்று கூறினார். மேலும், "இன்னும் ஆறு மாதங்கள் தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வேறு சொந்த வீடு ஏற்பாடு செய்கிறேன்" எனவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதி அளித்துள்ளார். இதன்பின்பு இன்று மாலை நடிகர் பாபா லட்சுமணன் எம்.எல்.ஏ குடியிருப்பில்  குடி பெயர்ந்தார் !