☰
×

“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…  ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?- அமைச்சர் ராஜ்மோகன்

 

எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ராஜ்மோகன் தனது எக்ஸ் தளத்தில், ““தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…  எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது. எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..  பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?  தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?  யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?  மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?  ஏன் SOP கொண்டு வந்தீர்கள்? 

வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?  மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?  எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்… “அந்த கரடி பொம்மை என்ன விலை?”“சார், அது கண்ணாடி சார்!”” எனக் குறிப்பிட்டுள்ளார்.