×

“பொதுமக்களை தாக்கும் திமுகவினர்”- ராஜ்மோகன் கண்டனம்

 

மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி, ''ஜூலை மாதத்தில் 42 டிஎம்சி தண்ணீர் வந்து இருக்கணும், ஆனால் இன்னைக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. ஆனால் இது பற்றி இன்னைக்கு இருக்கக்கூடிய முதல்வர் வாய் திறந்து பேசுகிறாரா? பேச மறுக்கிறார். அவர் இருக்கக்கூடிய கவலை என்ன? திமுக மீது என்ன பொய் வழக்கு போடலாம். என்ன பொய் கேஸ் போடலாம்'' என தெரிவித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுகவினர், ''திரிஷா… திரிஷா...'' என கோஷம் எழுப்பினர். உடனே உதயநிதி, ''எங்க தண்ணீ வருகிறதோ இல்லை. அங்கே தண்ணீ வரணும், நான் காவிரியை சொன்னேன்'' என்றார். திரிஷா, திரிஷா என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறிய உடனே உதயநிதி இவ்வாறு பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதியின் கைதுக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!

மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!

அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில்… pic.twitter.com/xArFYrpZMk

— Rajmohan (@imrajmohan) August 4, 2026


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன், “பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!  மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது! அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்.. 
சட்டம் தன் கடமையை செய்யும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.