×

மாதத்தில் ஒரு நாள்  ‘No Bag Day'... மாணவர்களுக்கு இலவச சீருடையுடன் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி- அமைச்சர் ராஜ்மோகன்

 

1 முதல் 12ம் வகுப்புவரை 2027-28ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும்  செயல்படுத்தப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை குறித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “புத்தகத்தில் இருப்பதை மண்டைக்குள் புகுத்துவது அல்ல கல்வி. சுயமாக சிந்திக்கும் மனிதர்களை உருவாக்குவதே கல்வி. உடற்கல்வி வகுப்புகளை ரத்து செய்ய கூடாது என அரசு தீர்மானம் எடுத்துள்ளது. ஆசிரியர்கள் பிரச்சனைகளை தீர்க்க உயர்மட்ட குழு அமைக்கப்படும். 1 முதல் 12ம் வகுப்புவரை 2027-28ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு அறிவு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும்  செயல்படுத்தப்படும். 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளி மாணவர்கள் திறன்களை மேம்படுத்த 6980 நடுநிலைப்பள்ளிகளில் சதுரங்கம் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் ரூ.20.17 லட்சத்தில் மேம்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு இலவச சீருடையுடன் ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும். மாணவர்களின் புத்தக சுமையை குறைக்க இனி மாதத்தில் ஒரு நாள்  ‘No Bag Day' கடைபிடிக்கப்படும். அரசு, தனியார் மற்றும் பெருநிறுவன மருத்துவமனைகளின் பங்களிப்புடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல், கண் மற்றும் காது பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 10 மாணவர்கள் இருந்தாலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும். ஒரு பள்ளி கூட மூடப்படாது. இயக்குநர் பாரதிராஜாவுக்கு தேனியில் ரூ.2.50 கோடியில் மணி மண்டபம் கட்டப்படும். சென்னையில் கழிவு நீரில் இருந்து COMPRESSED BIO GAS தயாரிக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுவதும் இயந்திரமயமாக்கப்படும்” என்றார்.