☰
×

"பெரியார் பெயரை வெச்சிட்டு பெரியாருக்கே விபூதி அடிச்சிருக்காங்கனா இது ஒரு Ideological Failure"- அமைச்சர் ராஜ்மோகன்

 

கள்ள நோட்டு, போதைப்பொருளைப் பிடிப்பதுபோல கள்ளப் புத்தகங்களைப் பிடித்தது வேதனையாக இருப்பதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி 6 மாதங்களை நிறைவு செய்துள்ளது. இது நல்ல தொடக்கம். தவெக ஆட்சியில் குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பெரியார் பெயரை வெச்சிட்டு பெரியாருக்கே விபூதி அடிச்சிருக்காங்கனா இது ஒரு Ideological Failure. கள்ள நோட்டு, போதைப்பொருளைப் பிடிப்பதுபோல கள்ளப் புத்தகங்களைப் பிடித்தது வேதனையாக இருக்கிறது.  

கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமே நெடுநாட்களாக இருக்கும் போதைக் கலாசாரம் தான். அதை வேரோடு சாய்க்க, உளவுத்துறை தகவல்களை கொண்டு ரெய்டுகள் நடக்கின்றன. போதை ஒழிக்கப்பட்டு சட்டம் - ஒழுங்கு மேம்படுத்தப்படும். போதைப்பொருள் வலையமைப்பை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. ஒரு போதைப்பொருள் 40 கைகள் மாறி வருகிறது. போதை கலாச்சாரம் ஒழிக்கப்படும்.  போதை ஒழிக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு மேம்படுத்தப்படும்.. முன்பை விட காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறோம்.. கடந்த காலத்தை சொல்லி Compare பண்ண வரவில்லை.  நூலகங்களுக்கான புத்தகங்களை தேர்வு செய்வதற்கு புதிய தேர்வுக்குழு அமைக்கப்படும். எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கல்வியாளர்கள் அதில் இடம்பெறுவர். தவெக ஆட்சியில் இதுவரை ஒரு நூல் கூட வாங்கவில்லை.  கருத்தியலாக அறிவுத்தளத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய ஊழல் இது.  ஆபாச மெசேஜ் அனுப்பியது தொடர்பாக கலெக்டர் புகார் அளித்தால் MLA மீது நடவடிக்கை எடுப்போம்" என்றார்.