"கள்ள நோட்டுகளை அச்சடிப்பதுபோல் AI பயன்படுத்தி புத்தகங்களை அச்சடித்து மோசடி"- ராஜ்மோகன்
கள்ள நோட்டுகளை அச்சடிப்பதுபோல் AI பயன்படுத்தி புத்தகங்களை அச்சடித்து மோசடி செய்துள்ளார்கள் என நூலாக புத்தக ஊழல் குறித்து தி.மு.க சார்பிலும் புகார் அளித்துள்ளது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "அவர்களே பாம் வைப்பார்களாம்.. அப்புறம் அவர்களே போய் எடுப்பார்களாம்..! இதெல்லாம் நசைச்சுவை செய்தில தான் வரணும்.. முன்னாள் அமைச்சர் மீது அவர்களுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. கள்ளநோட்டு அடிப்பது போல, AI-ஐப் பயன்படுத்தி உண்மையான புத்தகத்தில் இருந்து கருத்துகளைத் திருடி புத்தகத்தை அச்சிட்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அறிவுத் திருட்டு! திமுகவும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருப்பது நகைச்சுவைச் செய்தியில்தான் வர வேண்டும். தமிழ்நாடு முழுக்க நூலகங்களில் படிந்திருக்கின்ற டிஜிட்டல் கரையான்களை சுத்தம் செய்ய வேண்டும். அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.
பெரியார் நூலகத்தை ஆய்வு செய்யாமல் முதல்வர் திறந்ததாக ஈபிஎஸ் விமர்சனம் செய்கிறார். நூலகம் திறப்பதற்குத் தயாராக இருந்த நிலையில், அதைச் செப்பனிட்டு மாணவர்கள் வந்து செல்ல வசதிகளை ஏற்பாடு செய்து திறந்தோம். பர்ச்சேஸ் ஆர்டரை எப்படி மாற்ற முடியும்? கொள்முதல் ஆர்டரை மாற்ற முடியுமா? கருவூலத்திலிருந்து மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்ற ரிலீஸ் ஆர்டரை மாற்ற முடியுமா? ஆர்டரை மாற்றுவது வேறு, ஆய்வு செய்வது வேறு. ஈபிஎஸ் அரசியல் காரணத்திற்காகச் சொல்கிறார். " என்றார்.