"உதயநிதி ஸ்டாலின் துப்பறிவாளன் போல் செயல்படுகிறார்"- ராஜ்மோகன்
திமுக நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் பணிக்காகக் கைகோர்க்க முன்வந்தால், நாங்கள் அரவணைக்கத் தயார் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "திமுக நிர்வாகிகள் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, மக்கள் பணிக்காகக் கைகோர்க்க முன்வந்தால், நாங்கள் அரவணைக்கத் தயார். மழைக்காலம் முடியும் வரை யாரும் யாரையும் குறை சொல்வதை விட்டுவிட்டு, களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும். அமுதம் அங்காடியில் குறைந்த விலையில் 6 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. அரிசி ரூ.30 மற்றும் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசியை பாலிஷ் செய்து வழங்கவில்லை. அமுதம் அங்காடி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் துப்பறிவாளன் போல் செயல்படுகிறார்.
சினிமா பாட்டை பார்த்துக் கொண்டிருந்தவர்களை முழு நேரம் சட்டமன்ற பார்க்க வைத்த முதல்வர் விஜய்க்கு நன்றி. பட்டிமன்றத்தில் பேசிய என்னை சட்டமன்றத்தில் பேச வைத்தவர் என் தலைவர். மக்களுக்கு உண்மையாக இருப்பேன்; இந்த அலுவலகத்திற்கு மனுவுடன் வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி, பணத்துடன் வருபவர்களுக்கு இல்லை. எல்லோருடனும் எளிமையாக, இனிமையாக பழகக்கூடிய ஒரு மாமனிதர்! தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளை உலகம் முழுக்க கொண்டுபோய் சேர்த்ததில் இவருக்கும் பங்குண்டு" என்றார்.