வாரத்தில் இனி 5 நாட்களும் ”P.E.T Period” - அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களின் உடல்நலத்திற்கும் விளையாட்டுத் திறனுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “வாரத்தில் 5 நாட்கள் விளையாட்டு வகுப்பு நடத்தப்படும். விளையாட்டு வகுப்புகளை எக்காரணம் கொண்டும் ரத்து செய்யக்கூடாது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 1-5ம் வகுப்புகளுக்கு 90 நிமிட பாடவேளை, 6-10ம் வகுப்புகளுக்கு தலா 45 நிமிட பாடவேளை ஒதுக்கீடு செய்யப்படும். 11-12ம்வகுப்புகளுக்கு புதிய பாட அட்டவணையில் வாரத்தில் 2 PET வகுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். 1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் PET வகுப்புகள் கட்டாயம். வாரத்தில் 5 நாட்களும் PET வகுப்புகள் கனவாக அல்ல நினைவாகிறது.. தினந்தோறும் மாணவர்களுக்கு PET Period.. எந்த காரணம் கொண்டும் PET Period-ஐ கட் பண்ண கூடாது.. குழந்தைகளை விளையாட்டில் ஊக்குவிக்கணும்” என்றார்.